மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/30/2017 3:18:04 PM இராணுவத்தினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி

இராணுவத்தினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி

2000 பயனாளிகளுக்கு “விருசர” அட்டைகளை வழங்கி வைப்பு

[2017/03/30]

நாட்டில் நிலவிய யுத்தத்தை வெற்றிகொண்டவர்கள் என்றவகையில், யுத்த வீரர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாத்து அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘விரு தரு விது பியச’ மூன்று மாடி கட்டிடத்தொகுதியை நேற்று (மார்ச், 29) வைபவ ரீதியாக திறந்துவைத்து உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த இந்நிகழ்வுடன் இணைந்ததாக வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்கள் ஆகியோருக்கு சுமார் 2000 “விருசர” அட்டைகளை வழங்கி வைத்தார்.

மேலும் அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில், சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை தொடர்பில் நிலவுகின்ற நன்மதிப்புடன் இணைந்தாக அதன் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகிய செயற்பாடுகளுக்கு பல வல்லரசு நாடுகளின் தலைவர்கள் துணை நிற்பததற்கு உறுதியளித்துள்ளதாகவும், சர்வதேச நல்லெண்ணம் மற்றும் நட்புறவானது நாட்டு மக்கள் உட்பட யுத்த வீரர்களின் கெளரவம் மற்றும் மரியாதையினை பாதுகாக்கும் என்பதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்த வீரர்களை அரசு எப்போதும் பாதுகாக்கும் எனவும் இராணுவத்தின் கீர்த்தி மற்றும் கௌரவத்தினை வலுவூட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் “விருசர” அட்டையினை இராணுவத்தின் பயனாளிகளுக்கு சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார். இதன்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏ ஜீ பி. கித்சிறி அவர்களும் பங்கேற்றிருந்தார்.

மேலும், ‘விருசர வரப்பிரசாத அட்டை' வழங்கும் திட்டமானது தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் சேமலாப நலன்களில் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனும் வழிகாட்டலின் கீழும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களினால் கடந்த ஆண்டு (2016) ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இத்திட்டத்தின் மூலம் பெருமளவிலான படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பல்வேறு பலன்களை 67 அரச மற்றும் தனியார் துறையினரிடமிருந்து அனுபவித்து வருகின்றனர். இதனூடாக உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு விஷேட கழிவுகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

ரணவிரு சேவா அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 30,000 க்கு மேற்பட்ட முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு “விருசர” அட்டை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மகா சங்க நாயக்க தேரர்கள், ஏனைய சமயத்தலைவர்கள், அமைச்சர்கள், வடமேல் மாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி, அதிதிகள், யுத்த வீர பயனாளிகள், பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் , ஆகியோர் கலந்து கொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்