மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 3/31/2017 5:08:40 PM இராணுவத்தினரின் அனுசரணையில் வடக்கில் மருத்துவ முகாம்

இராணுவத்தினரின் அனுசரணையில் வடக்கில் மருத்துவ முகாம்

[2017/03/31]

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம், கொழும்பு ரொட்டறி கழகம் மற்றும் கொழும்பு பிரன்ட் இன் நீட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம் ஒன்றினை அண்மையில் (மார்ச் 22 தொடக்கம் 24வரை) ஏற்பாடு செய்தது. அன்றைய தினம் நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செயற்கை கால்கள் என்பன அளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கிளிநொச்சி நல்லிணக்க மையத்தில் இடம்பெற்ற குறித்த இந் நிகழ்வில் கேட்டல் குறைபாட்டுக்கருவிகள், செயற்கை கால்கள் என்பவற்றுடன் ஒருதொகை மருந்துப் பொருட்களும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் நான்கு எலும்பியல் நிபுணர்கள் பங்கு பற்றிய இவ்விலவச மருத்துவ முகாமில் சுமார் 364 மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் மேலும் பலர் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்