மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/22/2017 11:36:00 AM ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

[2017/04/03]

ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் .01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கப்பலின் வருகையினை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் மேற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் எட்மிரல் நிராஜ அட்டிகள மற்றும் தளபதி மெய்க்காவலர் பிரிவு VI, கேப்டன் மஷாஷி கொண்டோஉ, தெறுசுகி கப்பலின் கட்டளை அதிகாரி கொமன்டோர் செய்ச்சி கஷிமொடோ ஆகியோருக்கிடையே இருதரப்பு விவகாரங்கள், மற்றும் நல்லுறவுகள் தொடர்பில் சுமூக கலந்துரையாடல் இடம் பெற்றன.

இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா மற்றும் ஜப்பானிய தற்பாதுகாப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” ஆகிய கப்பல்களுக்கிடையில் இருதரப்பு கப்பல் கடற்ப்பயிட்சி கொழும்பு துறைமுகத்தில் இம்மாதம் 2ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்