மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/3/2017 4:46:04 PM இராணுவத்தினரின் முயற்சியால் வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலைக்கு கணனி ஆய்வுகூடம்

இராணுவத்தினரின் முயற்சியால் வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலைக்கு கணனி ஆய்வுகூடம்

[2017/04/03]

வன்னி – பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு உட்பட்ட 62வது பிரிவு தலைமையகத்தின் அழைப்பின் பேரில் வரையறுக்கப்பட்ட பெண்டோன்ஸ் ஹய்லஸ் குறூப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (மார்ச் 30) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நிதியுதவி வழங்கிய நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி திரு. சுஜித் டி அல்விஸ் அவர்கள் பிரதம அதிதியாகவும் அவர்களுடன் 62வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஜெனரல் பீ எச் எம் ஏ விஜேசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன வசதிகளைக்கொண்ட திட்டத்தினை 62வது படைப்பிரிவு, 623 பிரிகேட் மற்றும் இராணுவத்தின் தொழிநுட்ப பிரிவினர் உள்ளிட்டோர் உதவியுடன் குறித்த திட்டம் நிறைவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மீள் குடியமர்த்தப்பட்ட வேஹரதென்ன கிராம மாணவர்கள் கல்விகற்கும் ஒரேஒரு இடமாக ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலை மாத்திரமே காணப்படுகிறது. இதேவேளை, இங்கு கணனி வசதிகள் இல்லாமையினால் மாணவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நிகழ்வு பிரதம அதிதி மற்றும் 62வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஆகியோரின் வருகையுடன் ஆரம்பமானது. பின்னர் பாடசாலை அதிபர், ஆசிரியர், மற்றும் மாணவர்கள் ஆகியோரால் அதிதிகளை வரவேற்று புதிய கணனி ஆய்வுகூடத்திற்கான நாடா வெட்டப்பட்டு கணனி ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுறது.

இந்நிகழ்வில் நிதியுதவி வழங்கிய நிறுவனத்தின் சார்பாக திரு. ரேஜீ குணவர்த்தன, திரு. சித்ரல் டி சில்வா மற்றும் திரு. சனுக விக்கிரம வர்தன ஆகியோர், 623 பிரிகேட் தளபதி, ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் பிரிகேட் தளபதியின் கீழுள்ள படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்