மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/4/2017 3:49:25 PM “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டு ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு.

“தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டு ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு.

[2017/04/03]

தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள் கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா பிராந்திய மாநாடு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 03) ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

குறித்த மாநாட்டினை இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் - தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய நிலையங்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் கொண்ட இம்மாநாட்டின் முதல் நாளில் மேஜெர் ஜெனெரல் (ஓய்வு) திபங்கர் பெனர்ஜி, வைத்திய கலாநிதி நிஸ்சல் பண்டே, மேஜெர் ஜெனெரல் ஏ கே எம் அப்துல் ரஹ்மான், மேஜெர் ஜெனெரல் (ஓய்வு) ஏ என் எம் முநீருஸ்ஸமான், திரு. மகேஷ் ராஜ் பகட்ட மற்றும் சமீன சமான் உள்ளிட்ட பல தலைசிறந்த நபர்கள் குறித்த தொனிப்பொருளின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் விளக்கக்காட்சிகளை முன்வைப்பதற்காக வருகைதந்திருந்தனர். இதன்போது இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. அசங்க அபேகுனசேகர அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற நிலைமையினை உருவாக்குவதில் தீவிரவாதம் ஒரு பொதுவான காரணியாகவும், இந்நிலைமை உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்தின் மூலம் ஏற்படும் வருடாந்த இறப்பின் எண்ணிக்கை தெற்காசியாவில் உயர்ந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். இவ்விடயமானது எமது பிராந்தியம் மற்றும் எமது சமூக பினைப்பிட்கும் ஒரு தொடர்ச்சியான சவாலாக அமையும். குறிப்பாக இலங்கையிலே இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினூடாக தீவிரவாதத்தினை தடுப்பது தொடர்பான பரந்த அளவிலான அனுபவத்தினை பெற்றுள்ளதாகவும். ஒரு பயங்கரவாத அமைப்பை வெற்றிகரமாக தோற்கடித்த ஒரே நாடு இலங்கை என்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும் அவர் இங்கு குறிப்பிடுகையில், தீவிரவாதத்தினை தடுப்பது தொடர்பான இலங்கையரின் அனுவபத்தினை பகிர்ந்துகொண்டு அவற்றிலிருந்து இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் இதகான களத்தினை வழங்குவதற்கு இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் ஒரு முக்கிய பங்கை வகிப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். மேலும் நாட்டில் முரண்பாடுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீவிரவாதத்தினை தடுப்பது தொடர்பாக சட்டரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் சர்வதேசரீதியல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், உள்நாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தீவிரவாதத்திற்கான நிதி செயற்பாடுகளை தடுப்பதாகவும் தெரிவித்தார். வன்முறை தீவிரவாதத்தினை எதிர்த்து தற்போதைய சூழலில் சாத்தியமான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டுவருவதாகவும், அதற்காக இலங்கை அரசு நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள ஆயுத சந்தை மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதாக அமையும். எதிகாலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுகள் போன்ற தீவிரவாத குழுக்களை முறியடிப்பதற்கு உறுதுணையாக இருக்கும். தெற்காசிய பிராந்தியத்தின் எழுகின்ற மனித பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சமூக-பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பிராந்திய அரசாங்கங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். வறுமை, இன முரண்பாடு, கல்விஅறிவின்மை, விசேடமாக இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை, ஆகிய காரணிகள் தீவிரப்போக்கு மற்றும் வன்முறை தீவிரவாதத்திற்கு முன்னிட்டுச் செல்வதாகவும், இதன் காரணமாகத்தான் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2017ம் ஆண்டினை வருமை ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளார் என்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தெற்காசியாவில் வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அலையினை முறியடிப்பதற்கான கூட்டு பாதுகாப்பு தந்திரோபாயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அத்தகையதொரு கூட்டு முயற்சி மற்றும் அரசியல் தேவை காணப்படுவதாகவும் இதனை இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் உதவியுடன் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டினை ஏற்பாடுசெய்து பிராந்திய ஒத்துழைப்பிற்காக தகவல்களை பகிர்துகொள்ளல், புலனாய்வு, மற்றும் பாதுகாப்பின் ஊடக சிறந்த நடைமுறைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இறுதியாக தெரிவித்தார்.

இந்நிகழ்வானது தெற்காசியாவின் பாதகாப்பு கற்கைகள் தொடர்பான சிந்தனைக் குழுமத்தினால் கலந்துரையாடல்கள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்தல் தொடர்பான சிறந்த நடைமுறைகளை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர், பாதுகாப்பு கற்கைகளுடன் தொடர்புடைய கல்வியியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறித்த மாநாடு நாளை நிறைவுபெரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்