மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/5/2017 12:53:35 PM அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்

அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்

[2017/04/05]

இலங்கையின் முன்னாள் பிரதமர் அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த தின நினைவு நாள் நிகழ்வு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (ஏப்ரல், 04) இடம்பெற்றது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் கந்தவள மாளிகையுடன் கூடிய 48 ஏக்கர் நிலத்தினையும் இதர சொத்துக்களையும் கொண்டிருந்த கந்தவள எஸ்டேடினை பாதுகாப்புக் கல்லூரி ஒன்றினை அமைக்கும் பொருட்டு அரசிற்கு நன்கொடையாக 1980ம் ஆண்டு வழங்கி வைத்த முன்னாள் பிரதமரும் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் புரவலருமாவார். குறித்த கல்லூரியானது 1981ம் ஆண்டு முப்படை அதிகாரிகள் இராணுவ கற்கைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் 1953ம் ஆண்டிலிருந்து 1956ம் ஆண்டுவரை இலங்கையின் பிரதமராக சேவையாற்றியுள்ளார். இவர் 1922ம் ஆண்டு சிலோன் லேசாயுத காலாட்படைப் பிரிவின் இரண்டம் நிலை லெப்டினன்ட் ஆக ஆணை அதிகாரம் பெற்ற அதிகாரியாக நியமனம்பெற்று 1939ம் ஆண்டு கட்டளை அதிகாரியாக தரமுயர்த்தப்பட்டு பின்னர் 1940ம் ஆண்டு லெப்டினன்ட் கேர்னல் ஆக தரமுயர்த்தப்பட்டார். மேலும் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் நாட்டுக்கு இவரால் மேற்கொள்ளப்பட்ட இவரின் உன்னத சேவைக்காக இறப்பதற்கு ஒருநாளைக்கு முன் அவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது ஜெனரல் ஆக தரமுயர்த்தப்பட்டார்.

குருணாகல் மாவட்ட தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் பிரவேசித்த இவர் நாட்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக 1953ம் ஆண்டு பதவியேற்பதட்கு முன்னர் தொடர்பாடல், பொதுவேலை மற்றும் போக்குவரத்து துறைகளில் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களது குடும்ப உறுப்பினர்கள், எட்மிரல் (ஒய்வு ) தயா சந்தகிரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழககத்தின் வேந்தர் , துணை வேந்தர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பயிற்சி பெரும் அதிகாரிகள் மற்றும் விஷேட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்