மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/6/2017 12:30:22 PM கூட்டு நடவடிக்கைகள் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள்

கூட்டு நடவடிக்கைகள் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள்

[2017/04/06]

அண்மையில் (ஏப்ரல் . 04) கொழும்பு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த “எம்.வி. டானியேலா” என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ, இலங்கை கடற்படையினரின் பாரிய முயற்சியால் தொடர்தும் பரவவிடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

குறித்த கப்பல் தீப்பற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இலங்கை கடற்படையினரின் அதிவேகத் தாக்குதல் படகுகள் தீயணைப்பு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இன்று காலை (ஏப்ரல் .05) குறித்த கப்பல் கொழும்பு கலங்கரை விளக்கத்தில் இருந்து 10 கடல் மைல் தூரம் வரை பயணிப்பதற்கு கடற்படையினர் உதவியுள்ளனர்.

இதேவேளை,கடற்படையினர் இந்திய உயரிஸ்தானிகர் காரியாலயத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த எஸ்சிஜி சூர் என்ற இந்திய கடலோர ரோந்துக் கப்பல் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்ததப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தென்பகுதி கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. சாகர மற்றும் சூர் ஆகிய கப்பல்களில் தீயணைப்புக்கான சிறப்பு வசதிகளும், தீயணைப்பு படையினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக, இலங்கைக்கு வந்திருந்த ஐஎன்எஸ் தர்ஷக் மற்றும் ஐஎன்எஸ் காரியல் ஆகிய இரு கப்பல்களையும் தீயணைப்பு நடவடிக்கைக்காக இந்தியக் கடற்படையினரால் அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக, இலங்கை கடற்படையின் மூன்று அதிவேக தாக்குதல் படகுகள் விரைந்து சென்று கப்பலில் இருந்த 21 மாலுமிகளையும் மீட்டதுடன், தீயிணை அணைக்கும் நடவடிக்கயினையும் மேற்கொண்டன. இவற்றுடன் இலங்கை விமானப்படையின் பெல்-212 உலங்குவானூர்தி ஒன்றும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்