மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/11/2017 10:53:29 AM மாற்றுத்திரனாளிகளுக்கு தன்னியக்க சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோள்கள் வழங்கி வைப்பு

மாற்றுத்திரனாளிகளுக்கு தன்னியக்க சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோள்கள் வழங்கி வைப்பு

[2017/04/10]

அங்கவீனமுற்ற முப்படையினை சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு 100 ஊன்றுகோள்கள் மற்றும் 1௦ தன்னியக்க சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் அமைச்சின் வளாகத்தில் இன்று (ஏப்ரல் .10) இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஊடக செயலாளர் திரு ரகித ராஜபக்ஸ அவர்கள் குறித்த இச்செயற்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை தனது சம்பளத்திலிருந்து வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வின்போது பாதுகாப்பு செயலாளருடன் மேலதிக பாதுகாப்பு செயலாளர் திரு.ஆர் எம் எஸ் சரத் குமார, முப்படை தளபதிகள் மற்றும் ஜனாதிபதி இணைப்பு அதிகாரி திரு. பாலித பெல்பொல ஆகியோரினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் ஆர் டி ஏ ரணவக, முப்படை அதிகாரிகள் மற்றும் அங்கவீனமுற்ற பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்