மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/18/2017 10:33:19 AM மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணபாணியில்

மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில்

[2017/04/16]

குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் (ஏப்ரல் .14) இங்குள்ள குப்பைமேட்டின் ஒரு பகுதி சரிந்துவிழுந்து பல வீடுகள் சேதமாகியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் கனரக இயந்திரங்கள் மற்றும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் மேற்கு - பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்கி நிவாரண நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுக்கும் வகையில் உதவி வழங்குமாறும் உள்ளூர் வாசிகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று வரை இராணுவ பொறியியலாளர்களது 1௦ அகழ்வு இயந்திரங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான ட்ரக் வண்டிகளும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

மேலும், மேஜர் ஜெனரல் ரணசிங்க அவர்கள் கூறுகையில் 180 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் அரசாங்க பதிவுகளின் படி 145 வீடுகள் உள்ளடங்கிய பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் அனர்த்தத்தின் மூலம் 40 வீடுகள் முழுஅளவிலும் ஏனையவை பகுதியலவிலும் சேதமாகியுள்ளதாகவும், குறித்த பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் 19 இறந்தவர்களின் உடல்களையும் மீட்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபடும் நபர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளின் சரியான எண்ணிக்கையினை கண்டுகொள்வதில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், சில பகுதிகள் முப்பது அடி மற்றும் 4௦ அடி ஆழத்திலான குப்பைக்குள் புததைந்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நிவாரண நடவடிக்கையினை துரிதப்படுத்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் சரியான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், மக்கள் வசித்திவரும் இவ்வாறான பகுதிகளில் இதுபோன்ற குப்பை மேடு சரிவு ஏற்படாதவண்ணமும், இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெராதவன்னமும் குப்பை மேடு தற்காலிகமாக காலி செய்யப்படும். இதேவேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பனிகளை மேற்கொண்டு வருகின்னர்.

     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

இது தொடர்பான செய்திகளுக்கு>>

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்பணியில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்