மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/18/2017 4:33:44 PM மீதொட்டமுல்ல நிவாரணப்பணிகள் தொடர்கிறது

மீதொட்டமுல்ல நிவாரணப்பணிகள் தொடர்கிறது

[2017/04/18]

குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணாமாக உயிர்கள் பல காவுகொள்ளப்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பல்துறை சார் அரச அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு படையினர், முழுமையான சேதம் தொடர்பான மதிப்பீடு மற்றும் இப்பகுதியில் எதிர்காலங்களில் நிகழ சாத்தியமான அனர்த்தங்கள் தொடர்பாக ஆராயும் ஒரு பூர்வாங்க மதிப்பீட்டுத் திட்டத்தினை முன்னெடுத்துவருவதாக இராணுவ தககவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பூர்வாங்க மதிப்பீட்டுத்திட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நில அளவையியல் திணைக்களம், பிரதேச செயலகம், பேராதனை பல்கலைக்கழக புவியியல் பீடம், புவியியல் ஆராய்ச்சி திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள், ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ள அதேவேளை அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்கள் என்.டி சில்வா மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அனர்த்தத்தினால் நாககமுள்ள, தர்மபுர, நீல்கேவத்த மற்றும் விஷித்துனேவத்த ஆகிய பிரதேசங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனர்த்தம் நிலவிய பகுதியைச் சூழவுள்ள 130 வீடுகளைச் சேர்ந்த பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகளுக்கு>>

மீதோட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர்

மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில்

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்பணியில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்