மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/21/2017 2:54:01 PM கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது…

கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது…

[2017/04/21]

அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட கௌரவ ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (2017.04.20) நள்ளிரவு 12 மணியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறானதாகும்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது பிரிவிற்கமைய மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய, எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தினாலும் அமுல்படுத்தப்படும் மற்றும் இயக்கப்படும் கழிவகற்றல், சேகரித்தல், கொண்டுசெல்லல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், பதப்படுத்தல், வேறுபிரித்தல், அகற்றுதல் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அதற்கு சமமான கருமங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இந்த உத்தரவுடன் தொடர்புடையவையாகும்.

அத்துடன் அவை அத்தியாவசிய சேவைகளாக அந்த அறிவித்தல் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பின்வரும் செயற்பாடுகள் உள்ளடக்கப்படுகின்றது.

01. எவராவதொரு நபருக்கோ அல்லது சொத்துக்கோ வாய்மூலமாகவோ அல்லது எழுத்துமூலமாகவோ துன்புறுத்தல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது, அச்சுறுத்துதல், பலவந்தப்படுத்தல் அல்லது எதாவதொரு வகையில் அவமானப்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளில் அச்செயல்களில் ஈடுபடுவதனை தடுத்தல், தாமதப்படுத்துதல் அல்லது இடையூறுசெய்ய முயற்சித்தல் குற்றமாகும். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கான அழுத்தம் கொடுத்தல், மக்களை ஆத்திரமூட்டல், ஏனைய முறைகளில் தூண்டுதல் ஊடாக அவ்வாறான சேவைகளை இயக்கும் எவரையாவது இடையூறு செய்தல், தொழிலிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்தல் ஆகிய செயல்கள் சட்டவிரோதமானதாகும். மேலும், இவ்வாறான கருமங்களுக்காக தொழில் வாய்ப்பு வழங்குதல் அல்லது தொழிலைப் பொறுப்பேற்றலை தடுப்பதும் அவ்வாறான குற்றமாகும்.இந்த செயற்பாடுகளுக்காக எவராவது உடல் ரீதியாகவோ வாய்மூலமோ அழுத்தம் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

02. இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய மேற்குறித்த செயல்களை மேற்கொண்ட, மேற்கொள்ளும் அல்லது மேற்கொண்டதாக சந்தேகிக்கக்கூடிய நியாயமான காரணங்கள் இருப்பின் எந்தவொரு பொலீஸ் அலுவலராலும் பிடியாணை இன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான ஒருவரைக் கைது செய்யலாம்.

03. இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டவர் நீதிவான் முன்னிலையிலான வழக்கு தீர்ப்பின் பின்னர் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்