மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/3/2017 5:16:49 PM

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

[2017/05/03]

பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று (மே .03) பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படை தளபதிகள் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமைவகித்தார்.

இன்று காலை அமைச்சிற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் வரவேற்றனர்.

மேற்படி நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றினுடைய 2016ம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் மதிப்பீடு தொடர்பாகவும் 2017ம் ஆண்டின் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், இராணுவ அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட பாதுகாப்புபடை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்