மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/5/2017 10:30:51 AM போர்வீரர்கள் நினைவு மாதம் பிரகடனம்…

போர்வீரர்கள் நினைவு மாதம் பிரகடனம்…

[2017/05/05]

2017 தேசிய போர்வீரர்கள் மாதத்தைப் பிரகடனப்படுத்தி, அதற்கான முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவித்தல் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மூன்று தசாப்தங்களுக்கு கூடுதலான காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுறுத்திய மனிதாபிமான நடவடிக்கையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் தமது அவயவங்களை அர்ப்பணித்த போர்வீரர்களை நினைவுகூரல் மற்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்குடன் இந்த போர்வீரர் மாதம் வருடாந்தம் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதனோடிணைந்ததாக போர்வீரர் கொடி விற்பனையும் இடம்பெறுகிறது.

ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா அம்மையாரால் முதலாவது நினைவு கொடி ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொடி விற்பனையில் கிடைத்த வருமானம் மாகாண ஆளுநர்களால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான கொடிகள் ஜனாதிபதி அவர்களால் மாகாண ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.ஜீ.ஜீ.கித்சிறி, மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, கடற்படைத் தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு படை பிரதானிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்