மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/15/2017 7:47:09 AM இந்திய- இலங்கைகடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு

இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு

[2017/05/14]

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து கொழும்பிலிருந்து சங்கமன்கந்த வரையிலான இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. குறித்த கணக்கெடுப்பின் இறுதி அறிக்கைகளை அண்மையில் (மே,12) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஐஎன்எஸ் தர்ஷக் கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் பியுஷ் போஸே அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம் கையளித்தார்.

இந்திய நீரியல் அளவீட்டுத் தினைக்களத்தின் உதவியுடன் இணைந்தாக முன்னெடுக்கப்பட்ட குறித்த நீரியல் அளவீடானது கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் இவ்வளவீட்டினை இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் நீரியல் அளவீட்டாளர்கள் சுமார் ஆறு வாரங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்ததாகவும் சுமார் 41,600 சதுர கிலோமீட்டர் (12,150 சதுர கடல்மைல்கள்) அளவிலான கடற்பிரதேசம் இவ் அளவீட்டுத்திட்டத்தில் உள்ளக்கப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு புதிதாக பெற்றுக்கொள்ளப்பட்டநீரியல் தரவுகள் பழைய தரவுகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இத்தரவுகளை கடலியல் அமைவிடம் மற்றும் அதனுடன் இணைந்த தேவைகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை கடற்படை பயன்படுத்தவுள்ளது. இது இலங்கை கடற்பரப்பினூடாக பயணிக்கும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கள் மூலம் மேலும் பல அனுகூலனகளை பெர்ருக்கொடுக்கவுள்ளது.

குறித்த நிகழ்வில் கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டனர.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்