மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/22/2017 10:01:40 AM “தல் அரம்பே கௌசல்ய– 2017” கண்காட்சி திறந்து வைப்பு

“தல் அரம்பே கௌசல்ய– 2017” கண்காட்சி திறந்து வைப்பு

[2017/05/20]

தொழில் நுட்பம் மற்றும் மீளாய்வு அமைச்சு, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து “தல் அரம்பே கௌசல்ய– 2017” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தது. குறித்த இக்கண்காட்சி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த இக்கண்காட்சியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படைப் பிரிவினர்களால் நிர்மானிக்கப்பட்ட பல்வறு கண்கவர் காட்சிப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டதுடன் இக்கண்காட்சியை பார்வையிட குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரும்பாலான பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும், இக்கண்காட்சியில் சிறந்த நிர்மாணங்களை படைத்த இராணுவ வீரர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன இலங்கை மீளாய்வு ஆணைக் குழுவின் ஆணையாளர் பேராசிரியர் சி. மகேஸ் எதிரிசிங்க அவர்களினால் வழங்கப்பட்டன. இதன்பிரகாரம், கோப்ரல் திசாநாயக்க டி.எம்.சி, கோப்ரல் திசாநாயக்க பீ.பி.டப்ள்யூ, சாஜன் கருணாதிலக்க எம்.என் ஆகியோர் முறையே முதலாவது , இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

குறித்த இந் நிகழ்வில், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, வட பிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா, 51 வது படைப் பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் மர்வின் பெரேரா, 552 வது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அதீப திலகரத்ன, வடக்கு முன் நடத்தல் பிரதேச கட்டளை அதிகாரி பிரிகேடியர் சனத் பெரேரா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்