மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/22/2017 1:14:26 PM ஜனாதிபதியினால் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை திறந்துவைப்பு

ஜனாதிபதியினால் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை திறந்துவைப்பு

[2017/05/22]

வேரஹெர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (மே, 21) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

மங்கள விளக்கேற்றும் நிகழ்வின் பின்னர் மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களுக்கு இலவச சுகாதார சேவை மற்றும் இலவச கல்வியின் நன்மைகளை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

மேலும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள சிகிச்சை நிலையங்களை பார்வையிட்டார்.
குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான 696 கட்டில்கள், அதிதீவிர சிகிச்சைக்காக 63 கட்டில்கள், 39 அவசர சிகிச்சைக்கான தேவைப்படுகின்ற கட்டில்கள் மற்றும் இரத்த சுத்திகரிப்பு பிரிவிற்கு 13 கட்டில்கள் உட்பட பல்வேறுபட்ட நோய்களுக்கான 20 சத்திர சிகிச்சை நிலையங்கள் கொண்ட சிறந்த வைத்தியசாலையையாக காணப்படுகிறது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர், முப்படை தளபதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், இராணுவ உயரதிகாரிகள், பல்கலைக் கழக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்