மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/24/2017 7:57:56 AM மென்செஸ்டர் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

மென்செஸ்டர் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

[2017/05/24]

19 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து, ஐம்பதுக்கு கூடுதலானோர் காயமடைய காரணமான பிரித்தானியா மென்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்.

அனைத்து வகையிலுமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முன்னுரிமை வழங்க வேண்டுமென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையாருக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை கொலை செய்தல் கோழைத்தனமான செயற்பாடு என தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அவர்கள் இந்த கவலையான வேளையில் பிரித்தானிய அரசாங்கத்துக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி_ ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்