மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/1/2017 11:10:55 AM வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

[2017/05/28]

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணத்தினால் தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை மீட்கும் பணிகளில் 109 குழுக்களாக 109 படகுகளில் சும்மார் 643 கடற்படை வீரர்கள் இன்று (மே, 28) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் தென் மற்றும் மேல் மாகாணங்களில் முறையே 45 வெள்ள அனர்த்தம் மற்றும் 64 மீட்பு நடவடிக்கைகளுக்கான குளுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

மேலும், காலி மாவட்டத்தின் நெலுவ, இமாதுவ, வண்டுரம்ப, உடுகம, எல்பிட்டியா, அம்பலாங்கொட, பாப் போடலலா மற்றும் யக்கலமுல்ல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹிக்கடுவ மற்றும் ரானா, மாத்தறை மாவட்டத்தின் கம்புறுபிட்டிய, மொரவகா, அக்குரஸ்ஸ, பிதிபதார மற்றும் டீயந்தரா. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பறகொட, பதுரலிய, கல்கேடிய, இலுக்போத்தான, மத்துகம, பெலனா மற்றும் வெலிபன்ன, ஆகிய இடங்களில் கடற்படையின் நிவாரண மீட்பு பணியாளர் குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டிய, நவகமுவ, ஹன்வெல், அவிசாவல்லா, பாதுக்க, அம்படால, களனி, அங்கொட மற்றும் கடுவெல, நகர்ப்புரம் பிரதேச செயலகம், இரத்தினபுரி மாவட்டத்தின் களவன, நிவிதிகலா, எஹலியகொட, ஏலபத்த, சமாண்டேவலை, மரகஹ சந்தி, அயாகம, தால்டுவா, கிரிஎல்ல மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த் பணியில் ஈடுபடும் கடற்படை வீரர்களினால் இதுவரையில் பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 4965 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சுமார் 22003 பொதி உணவும் இவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொடர்பு எண்கள்

அவசர அனர்த்த அவசரத் தொலைத் தொடர்பு 117

பொது அழைப்புகள்0 11 2136136

அவசர செயல்பாடுகள் மையம் 011 2670002

                               011 2136222

தொலைநகல் 011 2670079

மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தொலைபேசி எண்கள்

இரத்தினபுரி மாவட்டம் 0452222235 / 0714423760

களுத்துறை மாவட்டம் 034 2222235 / 0716814813

காலி மாவட்டம் 0912234235 / 0714415377

மாத்தறை மாவட்டம் 0412222235 / 0776864397

அம்பாந்தோட்டை மாவட்டம் 0472256235 / 0714441612

கொழும்பு மாவட்டம் 0112369134 / 0773184910

கம்பஹா மாவட்டம் 0332222235 / 0773273507

கேகாலை மாவட்டம் 0352222235 / 0773633293

     
     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்