மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/1/2017 11:00:06 AM இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

[2017/05/31]

தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரத்தினபுரி மாவட்டம் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு கற்பாறைகள் மற்றும் பாரிய மரங்கள் வீதியில் வீழ்ந்துடன் பல வீதிகள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத அளவிற்கு வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டது. இதன் காரணமாக நிவாரண நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன், நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் குழுவினர் கைவிடப்பட்ட மற்றும் தூர பகுதிகளுக்கு செல்வதற்கு பல சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர்.

இதேவேளை, கலவான–அஹலவத்த- ரத்தினபுரி பாதை, அயகம–கவரகிரிய பாதை மற்றும் கலவான–அகலவத்த - இரத்தினபுரி பிரதான வீதி என்பன நவீன இயந்திரங்களை பயண்படுத்தி இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினரால் தடைகளை அகற்றி சுத்திகரிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கை இராணுவத்தின் வைத்திய படைப்பிரிவினர் களுத்துறை, புளத்சிங்கலா, பஹியங்கலா, கஹதுவ மற்றும் காலி பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கிவருவதுடன், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பல வீதிகள் போக்குவரத்தினை மேற்கொள்ளும் வகையில் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

     
     
     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருக

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்ட

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்