மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/4/2017 1:17:21 PM நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி

நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி

[2017/06/03]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவு செய்யப்பட்டது. குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, களனி பிரதேசத்தின் மீககவத்த, வீரசிங்க மாவத்தை, தளங்கபத மற்றும் தர்மாலோக பகுதிகளில் உள்ள வடிகால்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கையொன்றினை கடற்படையினர் முன்னெடுத்தனர். இவர்கள் இப்பகுதிகளில் காணப்படும் குப்பைகூளங்கள், சேறுகள் மற்றும் அங்கு வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் போன்றவற்றை குறித்த இடங்களில் இருந்து அகற்றினர். அப்பகுதிகளில் தொடரும் மழைவீழ்ச்சி காரணாமாக குறித்த வடிகால்கள் அடைப்புக்குள்ளாகியிருந்தது. இந் நடவடிக்கைகளில் சுமார் 75ற்கு மேற்பட்ட கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

அத்துடன் மாத்தறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுத்தப்படுத்தும் பல வேலைத் திட்டங்களை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். அவர்கள் வெள்ளத்தினால் பாதிப்பட்ட பிரதேசங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீள் ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்களை முன்னெடுத்துவருகின்றனர். அத்துடன் அவர்கள் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்