'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்ட' கருத்தரங்கு வெற்றிகரமாக
நிறைவு
[2017/06/06]
பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா
பசுபிக் கட்டளையகம் ஆகியன இணைந்து நடாத்ததிய 'பன்னாட்டு தொடர்புகள்
இடைசெயலாற்றல் திட்டம்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு அண்மையில் (ஜூன்,
02) வெற்றிகரமாக நிறைவுற்றது.
ஐந்து நாட்கள் இடம் பெற்ற குறித்த கருத்தரங்கில்
அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், இந்தோனேசியா, ஜப்பான்,
மலேஷியா, மாலைதீவுகள், மங்கோலியா, நேபாளம், நியூசிலாந்து, பப்புவா நியூ
கினி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, டோங்கா மற்றும் அமெரிக்கா
ஆகிய நாடுகளின் 39 இராணுவ அதிகாரிகள் உட்பட 50 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
குறித்த இக்கருத்தரங்கு கடந்த மாதம் 29ம் திகதி ஆரம்பமானது. ஆசிய பசுபிக்
அரங்கில் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கையின்போது
சர்வதச உறவுகளை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கின் நிறைவு வைபவத்தில் இராணுவ
அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களும்
பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|