மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/7/2017 10:28:00 AM பாதுகாப்பு அமைச்சில் “பொசன் பக்தி கீ மியசிய” நிகழ்வு

பாதுகாப்பு அமைச்சில் “பொசன் பக்தி கீ மியசிய” நிகழ்வு

[2017/06/06]

எதிவரும் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 06) இடம்பெற்ற பொசன் பக்தி கீ மியசிய எனும் பௌத்த சமயத்தின் சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் பக்திப்பாடல்கள் இசைக்கப்பட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அமைச்சின் நலன்புரி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட குறித்த நிகழ்வில் டிஐ சேனாரத்ன மற்றும் அவரின் குழுக்களால் மேற்படி பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களின் நிதி உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட பசு கன்று ஒன்று சுதந்திரமாக நடமாட செய்யும் வகையில் செயலாளர் அவர்களால் இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடைகள் பணிப்பாளர் கேர்ணல் பீ குணரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகட்ட வேண்டும் எனும் புத்த பெருமானின் போதனைக்கமைய புனித பொசன் போயா தினத்தினை முன்னிட்டு குறித்த புண்ணிய நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சின் சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குணவர்த்தன, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்