மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/9/2017 10:32:02 AM வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் கடற்படையினரின் உதவி

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் கடற்படையினரின் உதவி

[2017/06/07]

அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பெரும் தொகையான நிவாரண பொருட்கள் யாழ் கடற்படையினரால் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரண பொருட்களை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களிடம் அண்மையில் (ஜூன் 01) ஒப்படைக்கப்பட்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட- தென் சகோதர ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களின் வழி காட்டுதலுக்கமைய கடற்படையின் சமூக நலன்புரி நிலையத்தினால் சுமார் 1,000 உலர் உணவு பொதிகள், மற்றும் 5 லிட்டர் கொண்ட 495 குடிநீர் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்