மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/12/2017 10:09:45 AM தொடர்ந்தும் இராணுவத்தினரின் அனர்த்த நிவாரணப்பணிகள்

தொடர்ந்தும் இராணுவத்தினரின் அனர்த்த நிவாரணப்பணிகள்

[2017/06/10]

இலங்கை இராணுவத்தினர் மாத்தறை, காலி, கொழும்பு, கேகாளை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில் மாசடைந்த குடிநீர் கிணறுகளை சுத்திகரித்தல் மற்றும் கழிவு நீரினை அகற்றுதல் போன்ற வேளைத்திட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இராணுவத்தினர் மாத்தறை மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாசடைந்த குடிநீர் கிணறுகளை சுத்திகரித்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு தயாரித்தல், உலர் உணவுப் பொதிகள் விநியோகித்தல், பாடசாலைகள் சுத்தம் செய்தல், சேதமடைந்த வீதிகளை புனர்நிர்மாணம் செய்தல், ஆகிய பணிகளினை மேற்கொண்டு வருவதுடன் தேவையான பகுதிகளுக்கு கலி பவ்சர் வண்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் என்பவற்றினையும் வழங்கிவருகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இராணுவ வைத்திய குழுக்கள் பஹியங்கல, புளத்சிங்கல, குக்குலேகாங்கா, கலவன, யட்டியான, பூசா மற்றும் கஹதுவ ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் ஏனைய முகவர் நிலையங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு உரிய கட்டளை அதிகாரிகளுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்