மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/12/2017 2:23:11 PM யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/06/11]

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் நேற்று ( ஜூன், 11) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. வருகை தந்த இக்கப்பளை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த கப்பலில் வருகைதந்த கடற்படை வீரர்கள் 14 நாட்கள் தங்கியிருந்து இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து பல நிகழ்ச்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதுடன், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண வேளைத்திட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் 25ம் திகதி புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்