மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/12/2017 3:32:56 PM தெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி

தெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி

[2017/06/12]

அணமையில யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதை தொடர்ந்து, மற்றுமொரு குழுவினரான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் களுத்துறை புலத்சிங்கள யடகம்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான மூன்று இலட்சம் பெறுமதியுடைய கற்றலுக்குத்தேவையான புத்தகங்கள், பாடசாலை பைகள், குடிநீர் போத்தல்கள், ஆகியவற்றுடன் பாடசாலை திருத்த வேளைக்காக முப்பதாயிரம் ரூபா பணத்தொகையினையும் அண்மையில் (ஜூன், 09) அன்பளிப்புச் செய்துள்ளனர்.

படை அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் யாழ் பதுகாப்பு படை தளபதியாக முன்பு பணியாற்றியாவர் என்ற வகையில் நிவாரண உதவிப்பொருட்களுடன் குறித்த பாடசாலைக்கு வருகைத்தந்த 14 பல்கலைக்கழக மாணவர்களையும் ஒருங்கிணைத்து வைத்தார்

     

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டாவது குழுவினர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவிப்பொருட்களுடன் வருகை தந்துள்ளனர். ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இம்மாதம் 02ம் திகதி கொழும்புக்கு வருகைதந்த இம்மாணவர்கள் களுத்துறை குகுலேகங்க மொல்கவ மகா வித்தியாலய மாணவர்களுக்குத் தேவையான சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்க்கிவைக்கைப்பட்டது. குறித்த கற்றல் உபகரணங்கள் 1 தொடக்கம் 13 வரையுள்ள சுமார் 400 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறித்த பெறுமதியான உதவிப்பொருட்களை படை அதிகாரிகளின் பிரதானி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஒருங்கிணைப்புடன் குகுலேகங்க இல் அமைந்துள்ள இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் கொமடான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது,

     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்