மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/13/2017 4:33:25 PM ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார கண்காட்சி நாளை ஆரம்பம்.

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார கண்காட்சி நாளை ஆரம்பம்

[2017/06/13]

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த கலாச்சார கண்காட்சி நாளை (ஜுன்,14) சுதந்திர சதுக்க வளாகத்தில் மேடையேற்றப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜுன்,13) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அவர், கடந்த வருடம் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் அமைந்த இக்கலாச்சார கண்காட்சி மே மாதம் இடம்பெற்றதாகவும் இவ்வருடம் மே மாதத்தில் சர்வதேச வெசாக் தினம் கொண்டாப்பட்டதினால் குறித்த இக்கலாச்சார கண்காட்சியினை ஜுன் மாதத்தில் நடாத்த தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டார். இவ்வருடத்திற்கான இக்கலாச்சார கண்காட்சியில் நல்லிணக்கம், சகவாழ்வு, வறுமை ஒழிப்பின் ஊடக அபிவிருத்தி என்பவற்றின் பின்னணியில் அமைந்த கலாச்சார நிகழ்வுகள் அரங்கேற்றப்படவுள்ளன.

குறித்த இக்கலாச்சார கண்காட்சி ஜனாதிபதி அவர்களின் தலைமையிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடனும் நாளை மாலை 08.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் திரு. சரத் சந்திரசிறி விதாரன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. குலசூரிய மற்றும் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டிஏஆர் ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்