மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/29/2017 11:58:13 AM ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்வு

ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்வு

[2017/06/27]

இலங்கை சோஷலிச குடியரசின் தலைவரும், முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைய இது வரை காலமும் இராணுவ தளபதியாக இருந்த லெப்டின் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா அவர்களுக்கு 2017 ஜூன் 27ம் திகதி செயற்படும் வகையில் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1980 பெப்ரவரி 6ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் இலங்கை பொறியாளர்கள் படைபிரிவில் இரண்டாம் நிலை லெப்டினன்ட் அதிகாரம் பெற்ற அதிகாரியாக 1981 ஜூலை 18ம் திகதி நியமனம் பெற்று, 1985இல் கெப்டன், 1989இல் மேஜர், 1994இல் லெப்டினன்ட் கேர்னல், 1997இல் கேர்னல், 2003இல் பிரிகேடியர், மற்றும் 2009 நவம்பர் 30ம் திகதி வரை மேஜர் ஜெனரல் ஆகிய தரங்களையும் பெற்றுள்ளார்.

மேலும், இவர் லெப்டின் ஜெனரல் பதவி உயர்வுடன் 21வது இலங்கை இராணுவ தளபதியாக 2015 பெப்ரவரி 22ம் திகதி தனது கடமையை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்