மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/2/2017 8:21:01 AM ஐ.நா அதிகாரிகள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் சந்திப்பு

ஐ.நா அதிகாரிகள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் சந்திப்பு

[2017/06/30]

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் பணியில் ஈடுபட இருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்று (ஜூன், 30) அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி உணா மேக்குலி மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, குறித்த பணியில் ஈடுபட இருக்கும் இராணுவ வீரர்களின் பயிற்சிகள், அவர்களை தெரிவுசெய்யும் முறைகள் என்பனவற்றுடன் மொழி, சமூக மற்றும் கலாச்சரம் தொடர்பான ஆரம்பகட்ட பயிற்ச்சிகள் உட்பட மனித உரிமைகள் தொடர்பான அறிவுகள் ( பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் ) தொடர்பாகவும் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கான ஐ.நா ஆலோசகர் திருமதி. கிடா சபர்வால், மேலதிக செயலாளர் ( பாதுகாப்பு ) திரு. ஆர் எம் எஸ் சரத் குமார, பிரதி இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் டபள்யூ ஏஎன்எம் வீரசிங்க, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்