மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/6/2017 11:55:17 AM தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

[2017/07/05]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஐக்கிய அமெரிக்காவும் மாற்றம்பெரும் உலகின் பூகோள அரசியலும்” எனும் தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்று நேற்றைய தினம் (ஜூலை, 04) பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சரத்குமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பாதுகாப்பு கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. சாந்த ஹேனநாயக்க அவர்களினால் சிறப்பு விரிவுரை நிகழ்த்தப்பட்டது. கலாநிதி. ஹேனநாயக்க பூகோள அரசியலில் பல்வேறு சிறப்பு தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விரிவுரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் இலங்கை அனைத்து நாடுகளுக்கும் நட்பு நாடாக நிலைத்திருக்க வேண்டும் எனும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அசங்க அபேகுனசேகர, இராணுவ அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்