மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/10/2017 2:23:56 PM டெங்குநோய் ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரம்

டெங்குநோய் ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரம்

[2017/07/10]

இலங்கை இராணுவத்தினரால் இம்மாதம் (ஜூலை) 01ஆம் திகதியிலிருந்து 08ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட ஒரு வார கால டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் நிறைவு பெற்றுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வின் ஊடாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையாக பாதிப்புக்குள்ளான மற்றும் அதிக சனத்தொகை கொண்ட நகர்ப்புறங்களில் கொடிய டெங்கு நோய் பரவாது கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ அதிகாரிகள் இராணுவத் தளபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 500 இராணுவ வீரர்கள் கொண்ட குழுவினருடன், காவல் துறையினர், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டது.. விஷேட டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மேற்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த இவ்வகையான நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிபிடத்தக்கது.

     

இதேவேளை, இராணுவத்தினர் டெங்கு நோயாளர்களின் இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்யும் புதிய மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றை நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிறுவியுள்ளதாகவும் மேலும் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றினை இராணுவம் மற்றும் கடற்படையினர் ஒன்றினைந்து நிறுவியுள்ளதாகவும் இதற்கான நிதியுதவியினை ஜனாதிபதி செயளகத்திடமிருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது அத்துடன் அண்மையில் டெங்கு நோயாளர்களை கண்காணிக்கும் வகையில் மேலதிகமாக புதிய இரண்டு வாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினரினால் குறித்த வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்