மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/11/2017 10:31:15 AM அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

[2017/07/11]

ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் (எச் எம் ஏ எஸ்) “அருண்டா” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூலை, 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

118 மீட்டர் நீளம் மற்றும் 14.8 மீட்டர் அகலம் கொண்ட குறித்த கப்பலில் சுமார் 24 அதிகாரிகளுடட்பட 190 சிப்பந்திகள் வருகைதந்துள்ளனர். மேலும், இங்கு தரித்திருக்கவுள்ள இக்கப்பல்களின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கலாச்சார நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலிய நாட்டு அரசாங்கத்தினால் 10 சிறிய ரக வள்ளங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்