மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/11/2017 4:14:16 PM இராணுவத்தினரால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

இராணுவத்தினரால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம்

[2017/07/11]

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் சுமார் 350 பேர் வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வு அண்மையில் (ஜூலை, 07) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்த இருப்பு அளவினை மீள்நிரப்பும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக,59,64,68 படைப பிரிவினர்கள், முல்லைத்தீவு முன் பராமரிப்பு பிரிவு மற்றும் ஏனைய படையணியின் இராணுவ வீரர்களும் சுயமாக முன்வந்து தேவையான அளவு இரத்ததானம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்