மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/13/2017 10:47:38 AM கடலில் மூழ்கிய யானை மீட்பு

கடலில் மூழ்கிய யானை மீட்பு

[2017/07/12]

வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கொக்கிளாய் கொக்குதுடுவைக்கு 8 கடல்மைல்கள் அப்பால் உள்ள கடற்பரப்பில் யானை ஒன்று மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்ததனை அவதானித்ததை தொடர்ந்து அதன் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றிய நிகழ்வு நேற்றைய தினம்(ஜுலை, 11) கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன..

நிர்க்கதிக்குள்ளான குறித்த யானை தொடர்பான மீட்புப்பணியில் கடற்படைக்குச் சொந்தமான அதிவிரைவு தாக்குதல் படகு மற்றும் செட்ரிக் படகுகளுடன் கடற்படை சுழியோடிகள் ஈடுபட்டனர். அத்துடன் வனஜீவராசிகள் பரிபாலன திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றும் குறித்த மீட்பு பணிகளில் இணைந்து செயற்பட்டனர்.

கடற்படை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குழுவினரது அயராத முயற்சியின் பயனாக கடற்கரைக்கு திசை திருப்பப்பட்ட குறித்த காட்டுயானை புல்மோட்டை யானு ஓயா பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை கடற்படை வீரர்கள் நீர்பரப்பில் தத்தளித்த இதுபோன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் வனஜீவராசிகள் பலவற்றின் உயிரினை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்