மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/13/2017 1:41:35 PM “புளு வால் III” இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவினரினால் முன்டுப்பு

“புளு வால் III” இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவினரினால் முன்டுப்பு

[2017/07/13]

திருகோனமலை திரியாய கடலோரத்தில் கடல் மற்றும் தரை வழி படை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நடைபெற்ற “புளு வால் III” இறுதிப் பயிற்சிநெறி வெற்றிகரமாக நேற்று (ஜூலை, 12 ) நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்குப் பிராந்திய சாகரபுர கடலோரத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சியில் இலங்கை கடற்படையின் கடல்சார் படைப்பிரிவின் இரண்டு படையணிகளை சேர்ந்த சுமார் 159 வீரர்கள் கலந்துகொண்டனர். படையினரின் கடல்சார் நடவடிக்கைகளை பலப்படுத்தி அவர்களை தயார்நிலையில் வைத்திருப்பது குறித்த பயிற்சியின் நோக்கமாகும். மேலும் இப் பயிற்சிக்காக கடற்படையின் தரை இறக்கும் கப்பல் 821, 04 விரைவாக தாக்கும் படகு, 1 அதிவேக படகு, 8 கரையோர ரோந்து கப்பல் மற்றும் இலங்கை விமானப்படையின் F7 யுத்த விமானம், எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி ஆகியனவும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வினை பார்வையிட கிழக்குப் பிராந்தியத்திற்கான கடற்படை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்திருந்தனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்