மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/14/2017 3:04:20 PM இராணுவத்தினரால் கிளிநொச்சியில் நடமாடும் சிகிச்சை முகாம்

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் நடமாடும் சிகிச்சை முகாம்

[2017/07/14]

அண்மையில் (ஜூலை, 12) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கும் வகையிலான நடமாடும் சிகிச்சை முகாம் ஒன்று பூனேரி மகா வித்தியாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வில் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இப்பிரதேசத்தை சேர்ந்த குறைந்த வருமானம்பெறும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்தின்போது, மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத்தளபதி, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்