மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/16/2017 12:39:58 PM பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி

பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி

[2017/07/14]

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) பிற்பகல் பங்களாதேஷ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கௌரவிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இராணுவ நினைவுத்தூபி, தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சவார் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷ் இராணுவ நலன்புரி விடயங்கள் தொடர்பான அமைச்சர், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.

தனது விஜயத்தை நினைவுக்கூறும் வகையில் அங்கு மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி அவர்கள், விசேட பிரதிநிதிகள் நினைவுக்குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் பங்களாதேஷின் பங்கபந்து ஞாபகார்த்த நூதனசாலையையும் பார்வையிட்டனர்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் தந்தையாரான பங்கபந்து ஷேக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் வாழ்ந்த வீட்டில் இந்த நூதனசாலை பேணப்பட்டு வருகின்றது.

நூதனசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் புதல்வி வரவேற்றதுடன், விசேட பிரதிநிதிகள் நினைவுக்குறிப்பேட்டிலும் ஜனாதிபதி அவர்கள் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பதனால் அவருக்கு கோலாகலமான வரவேற்பு அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அவர்களை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் அவர்கள் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டது.

     

நன்றி_ஜனாதிபதி செய்தி ஊடகம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்