மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/3/2017 10:41:35 AM மிகப்பெரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிப்பு

மிகப்பெரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிப்பு

[2017/07/24]

இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட முதவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அண்மையில் (ஜூலை 22) இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வு இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையாளர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகீஷ்வர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கப்பல் தயாரிக்கும் பணிகள் 2014 செப்டம்பர் மாதம் 10ம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் வெள்ளோட்ட நிகழ்வு 2016 ஜூன் மாதம் 10ம் திகதியும் நடைபெற்றது. மேலும் 2017 ஆகஸ்ட் 02ம் திகதி குறித்த கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரம் நியமனம் செய்தல் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய தலமையில் கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளன.

105.7 மீட்டர் நீளம் மற்றும் 13.6 மீட்டர் அகலம் கொன்டுள்ள இக்கப்பளை தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயர்தர மென் உலங்குவானூர்தி இறங்கு தளத்தைக் கொண்டிருப்பதுடன் ஒரு மணி நேரத்திற்கு 24 கடல்மைல் அதிகபட்சவேகத்துடன் சுமார் 2350 தொன் பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டதாகவும், இக் கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 12-14 கடல்மைல் வேகம் பராமரித்து 4500 கடல்மைல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான திறனைக் கொண்டுள்ளதாகவும் காணப்படுகிறது.

குறித்த புதிய தொழில் நுட்ப கப்பல் இலங்கை கடல் பிராந்திய எல்லைக்குள் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் கடல் பிராந்திய சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற பணிகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.

குறித்த கப்பலினை கையளிக்கும் நிகழ்வில் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் முகாமைத்துவப் பணிப்பாளர்கள், இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல்படை சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்பான செய்திகள் >>

கோவா கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

பாதுகப்புச் செயலாளர் ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களை இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்