மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/25/2017 3:52:30 PM ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு தீயணைப்பு வண்டிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிப்பு…

ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு தீயணைப்பு வண்டிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிப்பு…

[2017/07/25]

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரணவின் ஒருங்கிணைப்பில் ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 150 மில்லியன் பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தின் தலைவர் கலாநிதி லால் திலகரத்னவினால் இதற்கான ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இந்த இரண்டு தீயணைப்பு வண்டிகளையும் இலங்கை விமானப் படை மற்றும் ஹிங்குரான்கொட பிரதேச சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் ஹிங்குரான்கொட பிரதேச சபை தலைவர் என்.டீ.கே ரம்புக்கனகே ஆகியோரிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரணவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்