மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/4/2017 12:43:57 PM கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தினால் ஆயிரம் குடும்பங்கள் பயனடைவு

கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவு

[2017/07/31]

இலங்கை கடற்படையினரின் சமூக நலத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் செயற்றிட்டத்தின் மூலம் கிராம புறங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். நாட்டு மக்களுக்கு தூய குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் குறித்த இத்திட்டத்தின்கீழ் இதுவரை நாடு பூராகவும் 239 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறித்த செயற்றிட்டம் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த செயற்றிட்டத்தின் மூலம் சுமார் 114,766குடும்பங்கள் மற்றும் 80,185 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் இலவசமாக சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.

அண்மையில், இலங்கை கடற்படையினரினரால் மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கொக்கெளிய, வவுனியா, முகமைலன் குளம் மூன்றாவது கொமாண்டோ படைப்பிவு ஆகிய இராணுவ வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்றையதினம் (ஜுலை, 29) வைபவ ரீதியாக் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த இத்திட்டம் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. முகமைலன் குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் அக்கிராமத்தைச் சூழவுள்ள 750 குடும்பங்கள் தூய குடிநீரினை பெற்றுக்கொள்ளவுள்ள அதேவேளை இராணுவ முகாமினுள் நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் அம்முகாமில் கீழ் உள்ள 1,600 படைவீரர்கள் நன்மையடையவுள்ளனர்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் சிந்தனைக்கமைவாக 2015ஆம் ஆண்டு குறித்த இச் செயற்றிட்டம் ஆரப்பிக்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பத்தில் இலங்கை கடற்படை வீரர்களின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்