மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/2/2017 9:22:15 AM நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

மூன்றுநாள் விஷேட டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

முப்படையினரை சேர்ந்த 7500 வீரர்கள் இத்திட்டத்தில் பங்குகெடுப்பு

[2017/08/01]

ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக அண்மையில் (ஜூலை, 30) நிறைவு பெற்றுள்ளது. தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த மூன்று நாட்களைக் கொண்ட இத்திட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலாளன பாதுகாப்பு படை வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதன் பிரகாரம், 4936 இராணுவ வீரர்கள், 1536 கடற்படை வீரர்கள் மற்றும் 964 விமானப்படை வீரர்கள் அடங்கலாக முப்படையினரை சேர்ந்த சுமார் 7436 பாதுகாப்பு படை வீரர்கள் குறித்த இத்திட்டத்தில் பங்குகொண்டு தமது சேவைகளை வழங்கியுள்ளனர்.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த இத்திட்டத்தில் பாடசாலைகள் மற்றும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவும் பொது இடங்களை மையப்படுத்தி பொது சுகாதார அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வத்தொண்டர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் இணைந்து முப்படை வீரர்களும் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் மற்றும் குப்பைகள் நிறைந்து காணப்பட்ட இடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைளில் ஈடுபட்டனர். இதன்போது வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களும் பொது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தின் ஆரம்ப தினத்தின்போது 1987 முப்படை வீர்ர்கள் கலந்துகொண்டனர். இரண்டாம் நாள் தொடர்ந்த இத்திட்டத்தில் பாடசாளைமானவர்களுடன் 3008 படை வீர்ர்களும், இறுதி நாளன்று 2441 படை வீர்களும் இணைந்து தமது சேவைகளை வழங்கியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் கிளிநொச்சி மல்லாவி வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானப்பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியினால் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 65வது படைப்பிரிவின் கீழுள்ள சுமார் 500 படை வீரர்கள் இச்சிரமதானப்பணியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், வைத்திய அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படையினர், தன்னார்வத்தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நகழ்வில் படைத்தரப்பினர் வைத்தியசாலை வளாகத்தினை அழகுபடுத்தும் வகையில் 150 பூச்சாடிகளும் அன்பளிப்புசெய்தனர். சுமார் 20 ஏக்கர் பரப்பளவைக்கொண்டு வட மாகணத்தில் காணப்படும் பிரதான சுகாதார நிலையமான இவ் வைத்தியசாலைக்கு நாளாந்தம் நூற்றுக்கும் அதிகாமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்