மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/9/2017 12:51:19 PM சீன மருந்துவக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்

சீன மருந்துவக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்

[2017/08/08]

 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இம்மாதம் (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ எனும் மருந்துவ கப்பலைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் இன்று (ஆகஸ்ட், 08) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இக் கப்பலை பார்வையிட வருகை தந்த பாதுகாப்பு செயலாளர் அவர்களை சீன மக்கள் இராணுவ கடற்படை, கிழக்கு கடல் கடற்படையின் துணைத் தளபதி ரியர் எட்மிரல் குவான் பைலின் அவர்களால் வரவேற்கப்பட்டதுடன், கப்பலில் வைத்து கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதைகளும் வழங்கப்பட்டது. மேலும் இதன்போது கப்பலின் செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றியும் கப்பலின் அதிகாரிகளினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், குறித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பரஸ்பரம் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர் எம் எஸ் சரத் குமார அவர்களும் கலந்துகொண்டார்.

'சமாதான பேழை' என அழைக்கப்படும் இக்கப்பல், உலகலாவிய ரீதியில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளின் போது விரைவான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். இதன் பிரகாரம் 381 மாலுமிகளைக் கொண்ட குறித்த கப்பல் உலகம்பூராகவும் உள்ள சுமார் 120,000 பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளது. உலகின் பல நாடுகளைச் சுற்றி வலம் வந்துள்ள இக் கப்பலில் நவீன அறுவைச்சிகிச்சை கூடம் , தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு மருத்துவ சேவைகள், குடியிருப்பு சிகிச்சை அலகுகள், சீடீ ஸ்கான் இயந்திரங்கள், கணனி மயப்படுத்தப்பட்ட நவீன சிகிச்சைக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன், அவசர நிலைமையின் போது நோயாளிகளை விரைவாக எடுத்துச்செல்லும் வகையில் உலங்குவானூர்தி வசதிகளையும் கொண்டுள்ளது.

'சமாதான பேழை' என அழைக்கப்படும் இக்கப்பல் நாளை (ஆகஸ்ட், 09) நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்