மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/10/2017 3:42:22 PM இரு இலங்கை மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு கடற்படை உதவி

இரு இலங்கை மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு கடற்படை உதவி

[2017/08/10]

இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் இந்திய கடல்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்புபடைக் கப்பல் “அய்யுஷ்” இடமிருந்து கையளிக்கப்பட்டு இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் அதிவேகப்படககின் மூலம் காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்ற இம்மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் மே 20ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

அண்மையில், இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இம்மாதம் 03ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருந்த 77 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் ஆபத்துக்குள்ளாகியிருந்த 6 மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவயுள்ளனர்.

குறித்த விடயம் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, கடுமையான கடல் சூழ்நிலைகளிலும் இலங்கை கடற்படைக் கப்பல் 'சாகர' விரைந்து செயற்பட்டு பாதுகாப்பாக ஆறு மீனவர்களையும் நேற்று (ஆகஸ்ட், 09) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் கடந்த மாதம் (ஜூலை) 21ஆம் திகதி 'தினு புதா 1 ' என்ற படகு மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்