மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/11/2017 3:34:43 PM புதிய கடற்படை நீரளவியல் காரியாலயம் நிர்மாணிப்பு

புதிய கடற்படை நீரளவியல் காரியாலயம் நிர்மாணிப்பு

[2017/08/11]

மட்டக்குளிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய நீரளவியல் காரியாலயம் அண்மையில் (ஆகஸ்ட், 10) மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. மஹிந்த அமரவீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய கடல்சார் தரவரிசை திட்டத்தினை உயர் தொழில்நுட்பவியல் தீர்வுகளை பயன்படுத்துவதனூடாக மேலும் திறமையான மற்றும் பயனுள்ள முறையில் செயற்படுத்தும் வகையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இலங்கை கடற்படை நீரளவியல் சேவை நிறுவனமும் 2016 ஜூன் 21ஆம் திகதி கூட்டாக இணைந்து செயற்படுகிறது.

தற்சமயம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையில் 20 'A'தர மற்றும் 15 'B'தரங்களையுடைய நிபுணத்துவம் வாய்ந்த நீரளவையியலாளர்கள் தற்காலிகமாக தமது கடமைகளை மேற்கொண்டுவருகின்ற அதேவேளை, குறித்த அளவையியலாளர்களுக்கு உதவியாக 85 கடற்படை சிப்பாய்களும் இச்சேவையில் தற்காலிகமாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சுமார் 36,000 கப்பல்கள் பயணிக்கின்ற கிழக்கு - மேற்கு சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் இலங்கை அமைந்துள்ளதனால் கடல் பாதுகாப்பு அமையத்திற்கு ஏற்ப இந்நாட்டின் கடல்பரப்பினை அடிக்கடி கடந்து செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் நாடு எனும் கடப்பட்டினைக் கொண்டுள்ளது. இதற்கமைய கப்பல்களை வழிநடத்தும் கடல்சார் தகவல்களை உள்ளடக்கிய வரைபடத்தின் புதிய வரைவு மற்றும் தரவுகளை புதுப்பித்தல் தொடர்பான கடமைகளை கடற்படை நீரளவியல் சேவை முன்னெடுத்து வருகின்றது. கடந்த நூற்றாண்டில் பிரித்தானியர்களினால் தயாரிக்கப்பட்ட வழிநடத்துதல் சார் விளக்க அட்டவணையே இன்றும் கப்பல்களை வழிநடத்தும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. எமது கடற்பரப்பினுள் கப்பல்களை வழிநடத்தும் புதிய வரைவு அட்டவணை தயாரித்தல் மற்றும் தரவுகளை புதுப்பித்தல் மூலம் எமது நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை மீதப்படுத்தவும் சம்பாதிக்கவும் முடியும். மேலும், நிலையான அபிவிருத்தி நோக்கிய முடிவுகளை எட்டுவதற்கு ஏதுவாக உயர்தர தகவல்களை வழங்குதல், இலங்கைக்கு உரித்தான கடற்பரப்பினை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்தல் எனும் உயர் நோக்கத்தினை அடைந்து கொள்வதே இலங்கை கடற்படை நீரளவியல் சேவையின் எதிர்பார்ப்பாகும்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்