மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/14/2017 12:03:15 PM கம்பஹாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் திரை நீக்கம்

கம்பஹாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் திரை நீக்கம்

[2017/08/14]

கம்பஹா ஜாஏல மேம்பால சுற்றுவட்ட அமைவிடத்தில் நிர்மாணிக்கப்பட்ட யுத்த வீரரின் ஞாபகார்த்த சிலை நேற்று (ஆகஸ்ட், 13) வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கத்தினால் கம்பஹா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நினைவுச் சின்னம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நினைவுச்சின்னம் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டும் வகையில் தமதுயிரை தியாகம் செய்த யுத்த வீரர்களின் ஒரு நினைவுத்தூபியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஒய்வுபெற்ற முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் செசில் திஸ்ஸர, கடற்படை அதிகாரிகளின் பிரதம பிரதானி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க, கடற்படை மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், கம்பஹா மாவட்டத்திற்கான கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கம் மற்றும் போர் வீரர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்