மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/31/2017 12:01:48 PM வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்

வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம்

[2017/08/31]

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் மெர்ரில் விக்ரமசிங்க அவர்களை வட மத்திய கடற்படை தலைமையகத்தில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 30) சந்தித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் மன்னாருக்கான விஜயத்தின்போது கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றத்துடன், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் தலைமன்னார் கடற்படை முகாமில் அமைந்துள்ள பழைய ரயில்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் என்பவற்றையும் பார்வையிட்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்