மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/6/2017 12:03:17 PM நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

[2017/09/06]

பத்தரமுல்ல, அகுரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் செவ்வாய் கிழமையன்று (செப்டெம்பர், 05) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். ஜனாதிபதியின் இவ்விஜயம், அங்கு நிர்மானிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்தாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டார். மேலும், அவருக்கு இக்கட்டிட நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி முகாமைத்துவ பிரிவினைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டிட நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் நிர்மாணப்பணிகள் தொடர்பான எந்த விடயமும் கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்களினால் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ அவர்களும் காலத்து கொண்டார்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்