இதேவேளை, யாழ்ப்பாணம்
சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுக்கும்
வகையில் கழிப்பறைகட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு இராணுவ வீரர்கள்
உதவியளித்துள்ளனர். யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும்
523ஆவது படைப்பிரிவிற்குரிய 12ஆவது கெமுனுவோட்ச் படையணி மற்றும் 4ஆவது
விஜயபாகு காலாட் படையணி ஆகியன இணைந்து குறித்த சுகாதார வசதிகள் அடங்கிய
கட்டிடத்தினை அமைப்பதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர். இக்கட்டிடத்தினை
நிர்மாணிப்பதற்கு தேவையான ரூபா 300,000/= நிதித்தொகையானது நியூயோர்க்கில்
வசிக்கும் திருமதி ஓனிலி எஸ். ரணசிங்க அவர்களினால் வழங்கப்பட்டது.
அண்மையில் (ஆகஸ்ட், 27) இக்
கழிப்பறைகட்டிடத்தின் திறப்பு விழா இடம்பெற்றது. இதன்போது கழிவறைகளை சுத்தம்
செய்யும் ஒரு தொகுதி பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட கழிப்பறை வளாகத்தை கட்டியெழுப்பிய இராணுவ சேவையை பாராட்டி
நன்கொடையாளரினால் இராணுவத்தினருக்கு டிசேட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. |