மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/7/2017 1:28:44 PM கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

[2017/09/07]

அண்மையில் (செப்டெம்பர், 05) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த கிளிநொச்சி பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்புப்படை தலைமையாக இராணுவத்தின் ஒத்துழைப்புடன் “தாமரைத் தடாக” கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு தகுதியுடைய 80 மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அன்பளிப்பினை நீர்கொழும்பு ரொட்டரி கழகம் வழங்கியுள்ளது.

குறித்த இந்நிகழ்விற்காக, டொன் பொஸ்கோ கல்லூரியில் கல்விகற்கும் மல்லாவி, விஸ்வமடு ஆகிய பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களிலிருந்து 65 மாணவர்களும், பூநேரியன் பகுதியிலிருந்து வறிய குடும்பத்தைச் சேர்ந்த 15 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களால் நீர்கொழும்பு ரொட்டரிக் கழக உறுப்பினர்களிடத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இவ் அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், டொன் பொஸ்கோ கல்லூரி அதிபர் அருட் தந்தை பயஸ் ஜோர்ஜ், நீர்கொழும்பு ரொட்டரிக் கழக தலைவர் திரு. பிரெட்டி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்