மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/9/2017 12:02:38 PM கன்பராவில் இடம்பெற்ற அவுஸ்ரேலியா - இலங்கை கூட்டுப்பணி குழு கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்பு

கன்பராவில் இடம்பெற்ற அவுஸ்ரேலியா - இலங்கை கூட்டுப்பணி குழு கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்பு

[2017/09/08]

அவுஸ்ரேலியா கன்பராவில் இடம்பெற்ற அவுஸ்ரேலியா - இலங்கை கூட்டுப்பணி குழு கூட்டத்தில் இலங்கைக்கான தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை வகித்தார். குறித்த நிகழ்வு அண்மையில் (செப்டம்பர், 06) கன்பராவில் உள்ள ஹோட்டல் ரீள்ம் இல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தூதுக்குழுவினர் உட்பட இணைத் தலைவர் - கொள்கைக் குழுவின் பிரதிச் செயலாளர் திருமதி. லிண்டா கெட்டஸ் மற்றும் இறையாண்மை எல்லைகள் செயல்பாடுகளுக்கான தளபதி, ஏயார் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆகிய பிரச்சினைகளை மையப்படுத்திய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் அவுஸ்ரேலியா சார்பில் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களத்தின் செயளாலர் மைக்கல் பெசுலோவும் கைச்சாத்திட்டனர்.

ஆட்கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கும், ஆட்கடத்தல் முறைகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இடைமறித்தல் மற்றும் ஆட்கடத்தல்காரர்களை விசாரணை செய்வதற்கும், குறித்த ஒப்பந்தம் வழிவகுப்பதுடன், ஆட்கடத்தல், சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டுசெல்லுவதை தடுத்தல், பணமோசடி நடவடிக்கைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் வகையிலான குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ள இவ் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில், இலங்கைத் தூதுக்குழுவைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திரு. எஸ். ஸ்கந்தகுமார், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிரா மெண்டிஸ், குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பணிப்பாளர் திரு. நிஹால் ரணசிங்க, கடற்படை நடவடிக்கைகளுக்கான பிரதம பணிப்பாளர் ரியர் அட்மிரல் பியால் டி சில்வா, மேலதிக செயலாளர் / நீதி அமைச்சு, திருமதி சர்மினி பியுமந்தி, சிரேஷ்ட உதவி கவுன்சிலர் / சட்டமா அதிபர் திணைக்களம், திருமதி டிஸ்னா வர்ணகுல, இலங்கை கடலோர காவல்படை பயிற்சி மற்றும் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர், கெப்டன் ரவீந்திர திஸ்ஸர, பணிப்பாளர் / FCID, எஸ்எஸ்பி பி.கே.டி. பிரியந்தா மற்றும் சட்ட அலுவலர் / வெளிவிவகார அமைச்சு, திருமதி. சஞ்சிகா காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். .


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்